என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கல்லூரி பேராசிரியர்கள்
நீங்கள் தேடியது "கல்லூரி பேராசிரியர்கள்"
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.
இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo

7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை 24 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் கணிசமான அளவுக்கு உயர உள்ளது.
கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின் பேரில் பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சம்பள உயர்வுக்கான அறிவிப்பையும் அரசாணையையும் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவின்படி அரசு கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் சம்பளம் 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயரும் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது பேராசிரியர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் பெற்று வருகிறார்கள். சம்பள உயர்வுக்கு பிறகு அவர்கள் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.2.2 லட்சம் வரை பெறுவார்கள்.
துணை பேராசிரியர்கள் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயரும்.
இந்த சம்பள உயர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரியர்ஸ் தொகை கிடைக்குமா? என்று தெரியவில்லை.
அரசு கல்லூரி பேராசிரியர்கள் சம்பள உயர்வு அமலுக்கு வந்தால் அது எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் மாத சம்பளத்தை விட 30 சதவீதம் அதிகமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X